மருத்துவர் M. கந்தசாமி
பிள்ளையின் குறிப்புகளில் இருந்து
இது எனது தாத்தா
தன் அனுபவ முறைகளையும் மற்றும் அவரின் நண்பர்கள், மகான்கள் போன்றவர்களிடம் இருந்து
பெற்ற மருத்துவ முறைகள் இதில் தொடராக வெளியிட்டு வருகிறேன் இதனால் மருத்துவர்களும்
ஆய்வாளர்களுக்கும் இது மிக பயன் படும் என்றும் நம்புகிறேன். பெரும் பாலான
மருந்துகள் அவரால் கையாளப்பட்டது. அந்நாளில் காலரா, பிளேக்கு போன்ற நோய்களில் பழனி
நகர் தவித்த நாட்களில் இவரது சிகிச்சையால் எண்ணற்றோர் குண்ம் அடைந்து பயன் பெற்று
உள்ளனர். இவரால் உலக ரட்சகன் என்ற மருத்துவ இதழ் நடத்தப் பட்டு வந்தது. மற்றும்
சென்னை ஹக்கீம் அப்பதுல்லா சாயபு அவர்களின் நல்ல நண்பராகவும் இருவரும் கடிதப்
போக்குவரத்து கொண்டு இருந்தனர் உயர் திரு அப்துல்லா சாயபு அவர்களின் வைத்திய இதழை
முடிந்த அளவு விரைவில் என்னிடம் இருக்கும் காப்பிகளை தருகிறேன், இவை இன்று கிடைப்பது
அரியது.
1) கெந்தகச்செம்பு
:--
கெந்தகம் –10 விராகன் எடை – திரிபலாச் சூரணம் – 10 விரகன் எடை எடுத்துக் கொண்டு இதை பொடித்து இரண்டு
பங்காகச் செய்து கொண்டு ஒரு இரும்பு சட்டியை நன்றாக கழுவிப்போட்டு அதில் திரிபலாச்
சூரணம் பங்காக்கியத்தில் ஒரு பாதியை எடுத்து இரும்புச்சட்டியில் போட்டு அதன்
மேல் கெந்தகத்தை பொடிசெய்து அதன் மேல் பரப்பி பின் மறுபாதி சூரணத்தை போடவும். பின்
அதில் தண்ணீரை அது மூழ்கும் வரை ஊற்றி தனியாக வைத்து விடவும் ஐந்து நாள் கழித்து
அந்த தண்ணீரை ஊற்றி விட்டு வேறு தண்ணீர் விட்டு விட்டு கழுவி விட்டு அதைச் சுரண்டி
எடுத்துக் கொள்ளவும்.
2) வங்கம்
நீத்து முறை :--
வங்கம் சுத்தி செய்து
கொண்டு - 10 விராகன் எடை எடுத்து ஈசல் இறகு போல் தகடு தட்டி
சிறு,சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொளவும். பின் ஒரு வட்டச் சட்டியை எடுத்து
அதில் அரசம் பட்டை தூள் செய்து போட்டுப் பரப்பி அதன் மேல் நாயின் வெள்ளை நிற
மலத்தை பரத்தி அதன் மேல் சிறு சிறு துண்டுகளாக வெட்டிய வங்கத் தகடுகளைப் பரப்பி
அதன் மேல் அரசம் பட்டை தூள்பரப்பி மேல் மூடி சீலை மண் செய்து கெஜபுடம் போட்டு
எடுக்க பற்பமாகும்.
3) தாளாக
பற்பம் :--
தாளகம் தேவையானதை வாங்கி
அதை கழுதையின் சிறுநீரில் ஐந்து நாள் ஊறப்போட்டு எடுத்துக் கொண்டு பின் எருமைச்
சாணியில் ஒருநாள் வைத்து எடுத்துக் கொண்டு பின் அதைக் கழுவி எடுத்து வன்னியிலையும்
அண்டத் தோலும் அரைத்து தாளகத்துக்கு கவசம் செய்து ஒரு ஜான் புடம் போட பற்பமாம்.
4) கெந்தக
பற்பம் :--
கெந்தகம் ஒரே கட்டியாக
வாங்கி அதைச் சானியுள் ஐந்து நாள் மூழ்கு மாறு வைத்து இருந்து பின் எடுத்து அந்தக்
கட்டிக்கு அத்திப்பாலில் பிரட்டிக் காய வைத்து பின் ஊழலத்தி பட்டையுமிலையும்
அரைத்து கவசம் செய்து சீலை மண் செய்து சான் புடம் போடவும் பற்பமாம்.
5) வங்க
பற்பம் :--
வங்கம் எருமை மோரில்
எழுதடவை உருக்கிச் சாய்த்து எடுத்துக் கொண்டு மிளகரனைப் பட்டையும், வெள்ளைச்
சரணையும் இரண்டு அரைத்துக் கவசம் கட்டி கெஜ புடம் போடவும்.
6) தாம்பூரச்
செந்தூரம் :--
தாம்பூரம் மூன்று விராகன்
எடை சுத்தி செய்து எடுத்துக் கொண்டு தாளகம் மூன்று விராகன் எடை எடுத்துக் கொண்டு
அதை மூன்று பாகமாகச் செய்து அதில் ஒரு பாகத்தை உத்தாமனிச் சார் விட்டு அரைத்து தாம்பரத் தகட்டிற்கு கவசம் செய்து அதன்
பின் ஒரு சட்டியில் வைத்து சிலை மன செய்து காயவைத்து முளப்புடம் போடவும். பின்
குளிக் கல்லில் வைத்து தட்ட உதிரும் பின் உதிராத பாகத்தை எடுத்து முன் போல்
இன்னொரு பாகம் தாளகத்தை எடுத்து அதே போல் சார் விட்டு அரைத்து கைவசம் செய்து முன்
போல் புடம் போட்டு எடுத்து கல்வத்தில் வைத்து தட்டி உதிரந்ததை எடுத்துக் கொண்டு
உதிராததை எடுத்து முன்போல் இன் ஓரு பாகம் தாளகத்தையும் எடுத்து முன்போல் சார்
விட்டு அரைத்து கவசம் செய்து புடம் போட்டு எடுத்து பின் எல்லாத்தையும் போட்டு உத்தாமணிச் சர் விட்டு அரைத்து வில்லை தட்டி
காய வைத்து புடம் போடவும். செந்தூரமாகும் நோய் அறிந்து கொடுக்கவும் இது கும்பகோணம்
சொக்கர் தெருவில் இருக்கும் கோவிந்தசாமி முறை.
7) தாம்பூர
மெழுகு :--
சுத்தி செய்த தாம்பூரப்
பொடி – 1 பலம்
சுத்தி செய்த கெந்தகம்
------------- 2 பலம்
இவைகளை பொடி செய்து ஒரு
பீங்கானில் போட்டு 50 எலுமிச்சம்
பழங்களின் சார் எடுத்து விட்டு கலக்கி வெய்யிலில் வைத்து வரவும் தினசரி இதைக்
கலக்கி விட்டு வெய்யிலி வைத்துச் சுடும் வரை வைக்கவும் இதில் இரண்டும் கரைந்து
மெழுகாகி விடும் பின் இதை கல்வத்தில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்
கொளவும்.இதில் குன்றி அளவு எடுத்து கருப்பட்டியில் வைத்துக் கொடுக்கவும். பத்தியம்
இல்லை.
8) பூரக்கட்டு
:-- ( கோவிந்தசாமி முறை )
சுத்திசெய்த ரசகற்பூரம்
----------------------- 1 பலம் ( ஒரே
கட்டியாக )
வாங்கி அதை ஒரு வட்டத்
தட்டு சட்டியை எடுத்து அதை அடுப்பின் வைத்து கமலாக்கினியாக எரித்துக் கொண்டு அந்த
பூரக் கட்டியை வைத்து அதன் மீது ஒரு கவுளி வெற்றிலைச் சார் எடுத்து கொண்டு
சுருக்கு தாக்க வேண்டும். இது ஒரு சாமம் (மூன்று மணி நேரம்) சார் பற்ற
வில்லையானால் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். பூரம் கட்டும்.
9) பேரன்டச்
சுன்னம் :--
பேரண்டம் ( மனித மண்டை ஓடு
) கொண்டு வந்து அதை பூநீறு கரைத்த நீரில் ஒரு இரவு ஊறப்போட்டு காலையில்
அடுப்பேத்தி நன்றாய் கொதிக்கவைத்து ( பூநிருக்குப் பதில் வாசிங் சோடா வாங்கிக்
கரைத்துக் கொள்ளலாம்.) இது போல் இரண்டு தரம் செய்து சுத்தி செய்து கொண்டு
சிறுநீரில் ( பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் சிறு நீரை பிடித்து எடுத்துக்
கொள்ளவும்.) முன் போல் ஊறவைத்து எடுத்துக் காய்ச்சி எடுத்து கழுவிக் கொள்ளவும்.
பின் ஒரு கலயத்தில் (மண்டை ஒட்டு சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும் இதை
முதலிலேயே உடைத்து போட்டு சுத்தி செய்து கொள்ளவும்) நாலாம் காய்ச்சல் வெடியுப்பு
நான்கு பலம் பொடி செய்து கொண்டு இரண்டாகப் பிரித்து ஒருபங்கை கலயத்தில் போட்டு
அதன் மீது உடைத்து சுத்தி செய்த மண்டை ஒட்டுத் துண்டுகளை பரப்பி அதன் மீது பாக்கி
உள்ள வெடியுப்பு பாதி யைப் போட்டு மேல் சட்டி மூடி சீலை மண் செய்து காய வைத்து
பின் கெஜ புடம் போடவும் பற்பமாகும். அதை அனுப்பானங்களில் கலந்து மன நிலை
பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கலாம்.
10) காடிக்கார
செந்தூரம் :---
( நேபாளம் போய்வந்த
தன்னாசியப்பன் கோவில் சாமியார் முறை )
இரசசெந்தூரம் --------- ------- 10 பங்கு
வெள்ளிக் காடிக்காரம் ---- 1 பங்கு -------- இரண்டையும் சேர்த்து
குளிக்கல்லில் நன்றாக அரைத்து வைத்துக் கொண்டு 1---1\ 2 --- 1\ 4 ( குன்றி ) அளவு தேனில்
கலந்து கொடுக்க காலர வயிற்றுப் போக்கு நிற்கும்.
11)
வெடியுப்பு செந்தூரம் :---
வெடியுப்பை எழுமிச்ச
பழச்சார் விட்டு நன்றாக அரைத்து வில்லை தட்டி காயவைத்து வட்டச்சட்டியில் கீழும்
மேலும் கரிப்பான் தழைச்சார் பூசி காயவைத்து மேற்கண்ட வில்லைகளை வைத்து மேல் சட்டி
மூடி சீலை மண் பூசி காயவைத்து ஒரு முளப்புடம் போடவும் செந்தூரமாகும். இதை எடுத்து
சீசாவில் வைத்து பணவிடை வீதம் தேனில் காலை மாலை இரண்டு வேளை கொடுத்து நெஞ்செரிவு
குலை எரிவு கைகால் எரிவு அசதி தீரும். பத்தியம் மேற்கண்ட வியாதிகளுக்கு தக்கபடி
வைக்கவும். கீழாநெல்லி தைலம் வைத்து தலைக்கு முழுகி வரவும் நல்லது.
12) மூக்கில்
இரத்தம் வடிதலுக்கு :--
வட்டக் கிலுகிலுப்பை வேர்
பட்டையை தட்டி அத்துடன் வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து ஒன்றிரண்டாக இடித்து இது
எல்லாம் சேர்த்து பசுவெண்ணெய் கலந்து பிசறி வெய்யிலில் வைத்து வரவும் உருகி
நெய்யாகும் பின் எடுத்து பாட்டிலில் வடித்து வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு நான்கு
தடவை இரண்டு நாசியிலும் விட்டு வர நின்று விடும் லேசானதற்கு மூன்றுநாள் விட்டால்
போதுமானது நாட்பட்டதாயின் தொடர்ந்து ஒரு மாதம் வர இரத்த பீனிசம் சீழ்ப்பீனிசம்
தீரும்.
13)
குஷ்டத்திற்கு ஒருவரின் அனுபவ முறை :--
சுத்தி செய்த கந்தகம்
ரூபாய் எடை ---------------------1/2
சுத்தி செய்த இரசம் ரூபாய்
எடை ------------------------1/8
சுத்தி செய்த இலிங்கம்
ரூபாய் எடை ------------------ 1/2
சுத்தி செய்த வீரம் ருபாய்
எடை --------------------------- 1/16
சுத்தி செய்த தாளகம்
ரூபாய் எடை ---------------------- 1/4
சுத்தி செய்த வெள்ளை
பாசனம் ரூபாய் எடை --- 1/16
இவைகளைப்
பொடிசெய்து கல்வத்தில் போட்டு பொடித்து கடுக்காய் கசாயத்தில் ஆறு மணி நேரம்
அரைத்து பின் எட்டிக் கொட்டைக் கசயத்தில் ஆறு மணி நேரம் அரைத்து பின் நயம் தேன்
விட்டு அரைத்து மெழுகு பதத்தில் எடுத்து பீங்கானில் பத்திரப் படுத்தவும் பின் ஒரு
மாதம் கழித்து பயன் படுத்தவும் வேலைக்கு ஒரு அரிசி முதல் இரண்டு குன்றி வரை வயது
ஆள் பலம் இவற்றை அனுசரித்துக் கொடுக்கவும் மூன்று நாள் கொடுத்து மூன்று நாள்
விட்டு மறுபடி கொடுக்கவும். இது போல் மூன்று முறை கொடுக்கவும். மருந்து
சாப்பிட்டதும் பசும் பால் குடிக்கவும் அல்லது வெண்னை சாப்பிடலாம் சகல குஷ்ட்டமும்
தீரும்.
14)
ரசசெந்தூரம் :--
இரசம் ரூபாய் எடை
------------- 1
கந்தகம் ரூபாய் எடை
----------- 1
இவ் இரண்டையும் நயமான
விளக்கெண்ணையில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு அரைத்து மெழுகு பதத்தில் உருண்டையாக
உருட்டி அதன் மேல் பட்டுத் துணியால் சுத்தி ஒரு ஓட்டில் கொடிவேலி வேர் தூள் செய்து
போட்டு அதன்மேல் அந்த உருண்டையை வைத்து அதன் மேல் மீண்டும் கொடிவேலித்தூள் மூடும்
வரை போட்டு மேல் ஓடு மூடி சீலை மண் செய்து சிறு புடம் போட செந்தூரமாகும். சகல
வியாதிக்கும் அனுப்பானங்களில் கொடுக்கவும்.
15)
வெடியுப்புச் சுண்ணம் ;--
வெடியுப்பை மாச்சோடாவில்
வைத்து புடமிடச் சுன்னமாகும்
16)
ரசசெந்தூரம் :---
ரசம் ரூபாய் எடை
----------- 3
துத்தம் ரூபாய் எடை
------- 1 1/2
17)
காலரா செந்தூரம் :--
ரசசெந்தூரம் விரகன் எடை
------ 10
காடிகாரம் விராகன் எடை
--------- 1
வீரம் விராகன் எடை
------------------ 1
இலிங்கம் விராகன் எடை
---------- 6
இவற்றைக் கல்வத்தில்
போட்டு ஆறு மணி நேரம் அரைத்து எடுத்துக் கொண்டு வயதுக்கு தக்கபடி கால் முதல் ஒரு
குன்றி வரை தேனில் கொடுக்கவும் விசபேதிகளுக்கு நல்ல குணம் தரும் மூன்று வேளை
அல்லது ஆறுவேளை கொடுத்தால் போதுமானது. இது எம். கந்தசாமி பிள்ளையின் அனுபவம்.
18)
தொண்டையில் ஏற்படும் கபநீர் கட்டு
(கட்டி) இதை சாவல் பேடு என்றும் சொல்வதுண்டு ஆங்கில மருத்துவத்தில் டிப்தீரியா
என்றும் அழைக்கப்படும் இது தொண்டையை இறுக்கி ஆளை கொன்றுவிடும் இதற்கு மருந்து :--
குக்கில், நயம் சாம்பிராணி
இரண்டையும் தூள் செய்து அனலில் இட்டு புகை காண்பிக்கவும் அத்துடன் இரண்டையும்
பொடித்துப் போட்டு கொதிக்க வைத்து தொண்டையில் படும் படி கொப்பளிக்கவும்
வேண்டும்.இந்தக் கசயத்தில் இரண்டு அவுன்ஸ் உள்ளுக்கும் கொடுக்கவேண்டும் இந்த
முறைகளை ஒரு நாளைக்கு மூன்று,நான்கு தடவை செய்ய வேண்டும்.
19)
வேறு முறை :--
அக்கரகாரம்,
சாம்பிராணியும் சேர்த்து மேற்க்கண்டவாறு தூள் செய்து மேற்க்கண்டவாறு. இவை
அல்லாமால் சூட பஸ்பம் சாப்பிட்டு வர வேண்டும் சூட பஸ்பத்துடன் மிளகுச் சூரணமும்
சேர்த்து தருவது விரைவில் கட்டியை உடைத்து விடும் அல்லது வற்றி விடும். இதற்காக
பயப்படத் தேவையில்லை. படிக்கார பற்பத்தை தேனில் குழைத்து சாப்பிட புண் ஆறிவிடும்.
20)
சோசியர் குளம் மன்மத கோஷ சாயபு அவர்கள்
தாராபுரம் நாவிதர் வேல் வைத்தியரிடம் எழுதி வாங்கி வந்த முறை :--
சுக்கு,மிளகு, திப்பிலி,
திப்பிலிமூலம், சவ்வியம், சித்திர மூலம், கடுகு வாய்விளங்கம், கருஞ்சீரகம்,
அசமதாகம், இந்துப்பு, வெடியுப்பு சவுக்காரம், கொத்தமல்லி, சதகுப்பை, அதிமதுரம்,
வெட்பாலை அரிசி, சாதிப்பத்திரி, கிராம்பு, தாளிசபத்திரி, இலவங்கப்பத்திரி, வகைக்கு
பலம் ஒன்று வீதம் வாங்கி பொடித்து சலித்து எடுத்துக் கொள்ளவும். சீனி பலம் மூன்று
கோரோசனை கழஞ்சு ஒன்று இவை எல்லாம் ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் வேளைக்கு
ஒரு பணவெடை தேனில் அல்லது வெண்ணையில் சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் சூதகவலி,
சூதகவாயு, வயிற்றுவலி போன்ற சூதக நோய்கள் தீரும்.
21)
சாமிநாத நாயுடு எழுதிக் கொடுத்து செய்த
அமுக்குராத் தைலம் :--
பீனிச ரோகத்திற்கு
அமுக்குலாந்தழை,
ஆதண்டம்தழை, பசும் பால் இவைகளின் சார் எல்லாம் எண்ணையின் சம அளவு
எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சிலை, பூலாங்கிலங்கு, வெட்டிவேர், விலாமிச்சம் வேர்,
நயம் சாம்பிராணி வால்மிளகு வகைக்கு மூன்று ரூபாய் எடை எடுத்து தூள் செய்து சார் +
எண்ணெய் + தூள் செய்த பொடி எல்லாம் சேர்த்து கலந்து நீர் சுண்டி மெழுகு பதம்
அல்லது மணல் பதத்தில் காச்சி எடுத்துக் கொண்டு தலை முழுகி வர வேண்டியது, தலை
முழுகும் நாளில் மதியம் பால் சாதம் மட்டும் சாப்பிட வேண்டும் பகல் தூக்கம் கூடாது
தயிலம் மூழ்கி குளிக்கும் வரை பெண்போகம் கூடாது.
22)
கையில்
விழும் கருப்பு நிறங்களுக்கு :--
சங்கம் குப்பி சார் 500 - ml, கழுதை
மூத்திரம் 500 - ml, விளக்கொன்னை 500 - ml எடுத்துக் கொண்டு எல்லாம் சேர்த்துக் காய்ச்சி
தினசரி காலை மாலை பத்து நாள் துட்டு எடை அல்லது இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து பால்
அல்லது காப்பியில் விட்டு குடிக்கவும். பின் பத்து நாள் விட்டு மறுபடி சாப்பிடவும்
இவ்விதம் மூன்று முறை குடிக்கவும் பத்தியம் உப்பு, புளி, தாளிதம் கூடாது.
23)
நீர்க்கடுப்புக்கு :--
கற்பூர சிலாசத்து,
காவிக்கல், கல்நார், பொரித்த வெங்காரம், பொரித்த படிகாரம் – வகைக்கு ஒரு பங்கு
எடுத்து பொடிசெய்து ஒரு சட்டியில் வைத்து மேல் சட்டி மூடி மூன்று மணி நேரம்
எரித்து ஆறினபின் குப்பியில் வைத்துக் கொண்டு சிறு கீரை, நெருஞ்சில், சிறுபீளை,
வெள்ளரி விதையும் சேர்த்து சமனாகக் கூட்டி அரைப் படி நீர் விட்டு எட்டில் ஒன்றாக
சுண்ட வைத்து வடிகட்டி அதில் ஒரு பண எடை கலந்து சாப்பிட்டு வர சதை அடைப்பு,
நீரடைப்பு, நீர்எரிவு, கல்லடைப்பு எல்லாம் தீரும்.
24) இரத்த
பீனிசத்திற்கு :--
பசு நெய்யில், வசம்பை
தட்டிப் போட்டு காய்ச்சி அல்லது சூரிய புடம் வைத்து கொண்டு எடுத்து நாசியில்
விட்டு வர மூக்கில் விழுகிற இரத்தம், சிராய் பீனிசம், ஒருத்தலை வலி தீரும்.
25)
புழுவெட்டு – முடி உதிர்தலுக்கு :--
காக்கை கொல்லி விதையை
அரைத்து எண்ணையில் கலக்கி அத்துடன் என்னைக்கு இரண்டு பாகம் பசும் பால் விட்டு
காய்ச்சி எடுத்துக் கொண்டு மயிர் உதிரும் இடங்களில் தடவி வந்தால் மயிர் சொட்டை,
மயிர் உதிர்தல் தீர்ந்து நன்றாக முடி வளரும். உள் மருந்து கொடுத்தல் நல்லது.
26)
வாந்தி – விக்கலுக்கு ( இது ஒரு ஆங்கில
மருத்துவர் செய்து வந்த முறை ) :--
காந்த ஊசி கடையி வாங்கி
அதை ஒரு சீசாவில் போட்டு அதில் எலுமிச்சம் பழசார் விட்டு வாய்க்கு கல்கார்க்
வைத்து மூடி பூமியில் ஒரு முழக்குழி தோண்டி அந்த சீசாவை வைத்து மண்போட்டு மூடி
விடவேண்டும் பின் பத்துநாள் கழித்து எடுத்து திறக்காமல் நன்றாக் குலுக்கி விட்டு
மீண்டும் புதைத்து விடவேண்டும் இதுபோல் மொத்தம் நான்கு தடவை செய்ய நாற்பது நாள்
ஆகும் பின் அதை எடுத்து திறந்து பார்க்க காந்த ஊசி கரைந்துவிடும் இதை ஒரு துளி
நாக்கில் விட்டு சாப்பிடச் செய்தால் எல்லாவித வாந்தி அரோசிகம் விக்கல் தீரும்
காந்த ஊசி கிடைக்காவிட்டால் ஊசி பிடிக்கும் காந்தக்கல் வாங்கிச் செய்து கொள்ளலாம்.
27)
பஞ்ச பாசன சுற்றத் தயிலம் :--
ஒருசாண் அகலம் நீளம் உள்ள
சுத்தமான சலவைசெய்த அல்லது புதிய மல்துணி வாங்கி அதில் கொடிக்கள்ளி பாலில் நனைத்து
காயவைத்து பின் மீதும் அதே பாலில் ஏழுமுறை நனைத்து நனைத்து காயவைத்து பின் அதே
துணியில் திருகுகள்ளி பால் இதே போல் ஏழுமுறை நனைத்து காயவைத்து எடுத்துக் கொண்டு
அதில் வீரம் – பூரம் – லிங்கம் – வெள்ளை பாசானம் – கெளரி பாடனம் வகைக்கு குன்றி
வீதம் எடுத்துக் கொண்டு பால் அடித்துக் காயவைத்த துணியில் வைத்து பொட்டணமாகக்
கட்டிக் கொண்டு பின் வேறு அகலத் துணியில் சுக்கு, மிளகு, திப்பிலி, பூண்டு,
கிராம்பு, வசம்பு, ஓமம், சதகுப்பை, சித்தரத்தை, பேரத்தை, தாளிசபத்திரி,
வாய்விளங்கம், பெருங்காயம் தேசாவரம், கடுகுரோகினி, கோஷ்டம், கொடிவேளிவேர், -- இவை
வகைக்கு ஒரு காசு எடை வாங்கி பொடித்து அதை துணியில் பரத்தி அதன் மேல் பாசன துணிப்
பொட்டலத்தை வைத்துச் சுற்றி கட்டி அதை நீண்ட கம்பியில் கட்டிப் பிடித்துக் கொண்டு
கிழே ஒரு அகலமான வாய் கொண்ட பாத்திரம் வைத்து அரைப்படி பசுவின் நெய் வைத்துக்
கொண்டு அதில் மூட்டையை நனைத்து தீப்பற்ற வைத்து அந்த தீயில் கொஞ்சம் கொஞ்சமாக
விட்டுவர எரிந்து தயிலம் சுடராக எரிந்து கீல் பாத்திரத்தில் விழும் அதை எடுத்து
வைத்துக் கொள்ளவும்.
28)
தாம்பூரம் :--
தாம்பூரம் இரவிய பொடி
தேவையான அளவு எலுமிச்சம் பழச்சார் மூழ்கும் அளவு விட்டு அப்படியே நன்றாக சுண்டி
உலர்ந்த பின்பு அதைத் தேய்த்துப் போட்டு எட்டி இலைச் சாறு விட்டு நான்கு சாமம் (12மணி
) நேரம் அல்லது தேவைப்படும் அளவு அரைத்து வில்லை செய்து நன்றாக காயவைத்து வட்ட
ஓட்டில் கோதுமை மாவை (சம்பா) நன்றாக நீர் விட்டு பிசைந்து இரண்டு அடை தட்டி
வெய்யிலில் வைத்து காய்ந்த பின் ஒரு அடையை ஓட்டில் வைத்து அதன் மேல் தாம்பர
வில்லையை வைத்து அதன் மேல் மற்றொரு அடையை வைத்து மேல் ஓடு மூட்டி சீலைமண் எழு
செய்து காய்ந்த பின் குழி தோண்டி ஐம்பது எரு அடியில் வைத்து அதன் மேல் ஒரு கூடை
புளியம் புரணி போட்டு அதன் மேல் சட்டியை வைத்து அதன் மேல் ஒரு கூட்டை புளியம்
புரணி யை கொட்டி அதன் மேல் ஐம்பது எரு அடுக்கி தீயிட்டு தட்ஜ்சனா மூர்த்திக்கு பூசைசெய்து மூன்று நாள் கழித்து எடுக்கவும் செந்தூரம் ஒரு
அரிசி எடை குன்மத்துக்கு கொடுக்கவும்
அதுபோல் தக்க அனுப்பானத்தில் குஷ்டம், தோல் நோய்களுக்கு கொடுக்கவும் உஷ்ண உடலிற்கு
வெல்லம், வெண்ணையில் கருப்பட்டியில் தரவும்,
இதைச் சுண்ணம் செய்ய
வேண்டுமானால் இதேமாதிரி ஆனால் கோதுமை அடைக்கு பதில் கிழிஞ்சல் சுண்ணாம்பு போட்டியில்
ஓட்டில்பரத்தி அதன் மேல் வில்லை வைத்து அதன்மேல் சுண்ணாம்பு பொடி போட்டு ஓடு மூட்டி சீலைமான் எழு செய்து
முன் போல் புடமிடவும்.
எட்டித்தழையில் சார்
எடுக்க துரிசு சுண்ணம் கொடுத்து புளியவும்
29)
வெடியுப்புச் சுண்ணம்
வெடியுப்புச் சுண்ணம்
வேலிப்பருத்தி தழையை கொண்டுவந்து இடித்து சார் எடுத்து வெடியுப்பு 8 ரூபாய் எடை சீனிக்காரம் 4 ருபாய் எடை இதைக் கல்வத்தில் இட்டு உத்தாமணி
சார்விட்டு ஒரு சாமம் ( மூன்று மணி ) அரைத்து வில்லை தட்டி காயவைத்து காய்ந்த பின்
ஓட்டில் வைத்து மேல் ஓடு மூட்டி சீலை மண் செய்து ஐந்து எருவில் புடமிட்டு எடுத்து
பார்க்க சுண்ணமாகும். இந்தச் சுன்னத்தை நவச்சாரம் ஒரு பலம் கட்டியாக எடுத்துக்
கொண்டு ஒரு செப்புக்குள் வெடியுப்புச் சுண்ணம் போட்டு நவச்சாரத்தை மேலே வைத்து
அதன் மேல் வெடியுப்புச் சுண்ணம் போட்டு மேலோடு மூட்டி சீலை மண் செய்து அடுப்பில்
வைத்து ஆவரங் குச்சியில் ஒரு சாமம் எரித்து இறக்கி ஆரிய பின் எடுக்க கடுங்காரச்
சுண்ணம் அந்தச் சுன்னத்தை எடுத்து பெரிய துரிஸ் கட்டிக்கு வீரம் 1/2 ருபாய் எடை, பூரம் 1/2 ருபாய் எடை
மேற்படி நவச்சாரச் சுண்ணம் 1/2 ரூபாய் எடை
எடுத்து வாய் உமிழ் நீரில் அரைத்து மேற்படி துரிசுக் கட்டிக்கு மேல் கவசம் செய்து
வெய்யிலில் காய வைத்து எடுத்து பின்பு மீண்டும் கல்வத்தில் இருக்கிற மருந்து
பூராவும் இது போல் பூசி காயவைத்து எடுத்து பட்டுத்துணி சுத்தி சீலை மண் செய்து
காய்ந்த பிறகு ஆறு சிறு எருவில் புடமிட கடுங்காரச் சுண்ணமாகும். மகோதரம் நீராம்பல்
சுவாசகாசம் ஒரு அரிசி எடை கொடுக்கவும் குணமாகும்
30)
தாளகம் –
தாளகம் இதை
சுண்ணாம்புக்கல் நடுவில் வைத்து தாளித்து இது போல் எழுதடவை செய்து மேற்படி
சுண்ணாம்பு தண்ணீரில் தொலாந்திரம் கட்டி எரித்து எடுத்துக் கொண்டு கொன்னைத்
தழைச்சார், பாலை தழை, சிவப்பு அல்லது வெள்ளைப் பூ அரளித்தழை மூன்றும் சமன் அளவு
எடுத்து இடித்து சார் எடுத்து ஒரு சிறு கலயத்தில் மேற்படி சார் விட்டு தாளாக
கட்டியை வைத்து ஓடு மூடி சீலை மண் செய்து சிறு எருவில் 2 1/2 அடியில் வைத்து அதன் மேல் வெள்வேலான் பட்டை
வைத்து அதன் மேல் கலயம் வைத்து முன் போல் வெள்வேலான் பட்டை அதே அளவு எருவு அடுக்கி
தீயிட்டு எடுக்கவும் கபரோகங்களுக்கு அரிசி எடை கொடுக்கவும்.
31)
வெடியுப்புச் சுண்ணம் - --
வெடியுப்புச் சுண்ணம் –--- 1 பங்கு அல்லது 50 gm
வீரம்
------------------------------- 1 பங்கு அல்லது 50 gm
ரசம்
-------------------------------- 1 பங்கு அல்லது 50 gm
தாளகம் சுத்திசெய்தது – 1 பங்கு அல்லது 50 gm
உலாந்தா லிங்கம் ---------
1 பங்கு அல்லது 50 gm
இவை யாவற்றையும் ஒன்றாய்
அரைத்து ஆடுதின்னாப் பாலை சார் விட்டு அரைத்து வில்லை தட்டி காய வைத்து ஒரு
கலையுத்தில் பாதி அளவு சார மண் போட்டு அதன் மேல் வில்லை வைத்து அதன் மேல் சார மண்
போட்டு கலையத்தை திறந்த பாகமாய் வைத்து மூன்று மணி நேரம் எரித்து பின்பு ஆறவைத்து
பின் மேற்படி மேற்படி சரக்குகளை மீண்டும் அதே அளவு சேர்த்து முன்போல் அரைத்து
எரித்து இவ்விதம் ஐந்து முறை எரித்தால் செந்துரமாகும் இந்தச் செந்தூரத்தில் சுத்தி
செய்த தாம்பூரத்தில் உருக்கு முகத்தில் 7
க்கு 1 குடுத்து
எடுத்துக் கொள்ளவும் வயது எட்டு.
இரசவெள்ளி
:--
கல் சுன்னாம்பு கொண்டு
வந்து அதில் கற்றாழை வேர்ச் சார் விட்டு அரைத்து குகை மூடி செய்து நிழலில்
உலர்த்தி இதற்குள் இரசம் விட்டு மேல்படி மூடியால் மூடி சீலை மண் செய்து காய்ந்த
பின்பு கெளதாரி புடம் போட்டு எடுத்துப் பார்த்தால் இரசம் எல்லாம் சுண்ணாம்பில்
ஏறியிருக்கும். அதை எடுத்து குழிக்கல்லில் போட்டு ஐவிரலித் தழைச் சார்விட்டு
நான்கு நாளிகை அரைத்து கழுவி போட்டு பார்த்தால் ரசம் வெண்ணை போல் இருக்கும்
உருட்டி எடுத்து வெய்யிலில் மூன்று நாள் வைத்து நான்காவது நாள் வெங்காரம் குடுத்து
உருக்க கட்டியாகும்.
32)
பாசனச்சுண்ணம்
:--
வெள்ளை பாசனாம் ஒரே
கட்டியாக வாங்கி நாத வெண்ணையை வெற்றிலை கனமாக பூசி இதை வெய்யிலில் வைக்கவும். பின்
மீண்டும் இது போல் பூசி வைக்கவும் இவ்விதம் மொத்தம் ஐந்து தடவை வைக்கவும். பின்
விடத்திலான் இலையை தேன் விட்டு அரைத்து அதன் மேல் பூசிக் காயவைத்து காய்ந்த பிறகு சிறு
புடம் போட கட்டிப் போகும். பின் 7 ங்காய்ச்சல்
வெடியுப்பு 6 ரூபாய் எடை நாத வெண்ணை 1/4 எடை திருகு கள்ளி பால் விட்டு அரைத்து கட்டிக்கு
பூசி காய்ந்த பிறகு 7 சீலை மண் செய்து
20 எருவில்
புடமிடச் சுண்ணமாகும்.
33)
வேறு –
தாளகத்தை எருக்கம்பாலில்
அரைத்து வில்லை செய்து காயவைத்து அகலில் வைத்து சீலை மண் செய்து காயவைத்து புடம்
போடவும் இப்படி பத்து புடம் போட பற்பமாகும் அதன் பின் மேற்படி பற்பத்தை மேற்படி
பால் விட்டு அரைத்து வெள்ளித் தகட்டிற்கு கீழும் மேலும் தடவி புடம் போடவும் இப்படி
பற்பம் ஆகிற வரை புடம் போடவும். பின்பு ஒரு விராகன் எடை ரசம் எடுத்து இந்த இந்த
பற்பம் இரண்டு விராகன் எடை எடுத்து கல்வத்தில் போட்டு எருக்கம் பால் விட்டு
அரைத்து உருட்டிக் கொண்டு பின் எருக்கம் வேர் பட்டை யை அரைத்து அதற்குள் வைத்து
புடம் போட்டு எடுத்துக் கொள்ளவும். இது வெள்ளியித்தில் நீர் வாங்கும் எட்டு ரூபாய்
எடைக்கு ஒரு பணவெடை கொடுக்கவும்.
34)
வீர
மெழுகு ---
வீரம் –2 ருபாய் எடை ஒரே கட்டியாக வாங்கிக் கொள்ளவும்
சூடம் –2 ரூபாய்
எடை
ஒரு சட்டியில் சூடத்தை
நுணுக்கி பாதி போட்டு அதன் மேல் வீரத்தை வைத்து அதன் மேல் மீதி பாதி கற்பூரத்தை
போட்டு கொளுத்தி எரிந்த பின்பு மேற்படி கட்டியை ஓட்டில் வைத்து கோவைத் தழைச் சார்
அரைபடி சுருக்கு கொடுத்து அதன் பிறகு பிரண்டைத்
தலைச்சார் 1/2 படி சுருக்கு
கொடுத்து அதன் பின் சார் எல்லாம் சுண்டி கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும் சமயத்தில்
கொஞ்சம் வேப்பண்ணெய் மேற்படி கட்டி மீதில் விட்டு இறக்கி வைத்து மேற்படி கட்டியை
எடுத்து கொஞ்சமாக வேப்பெண்ணெய் விட்டு அரைத்து பின் மேற்படிக்கு கொம்புத்தேன் விட்டு ஆறு மணி நேரம் அரைத்து எடுத்து பீங்கான்
பாட்டிலில் வைத்துக் கொள்ளவும், இது வாய் பிடிக்காது. பனங் கருப்பட்டியில் சுண்டக்
கடலையி பாதி எடுத்து ஏழு வேளை கொடுக்கவும், மறுபத்தியம் ஏழு வேளை இருந்து
விளக்கெண்ணை தேய்த்துக் குளிக்கவும். பத்தியம் உப்புவறுத்துச் சேர்க்கவும்
பசும்பால் சாதம் மேற்படி நெய் துவரம் பருப்பு அவரைபிஞ்சு ஆகும். மற்ற ஒன்றும்
ஆகாது மூன்று மாதம் உடல் உறவு கூடது. தீரும் வியாதிகள் குணமாம் வாயு, சூலை, மேக
வியாதிகள் தீரும்.
35)
சின்ன மனுஸ் முறை – லிங்க மெழுகு ---
கஸ்துரி – 1/4 (1
gm ) விராகன் எடை இராசகற்பூரம் – உலாந்த லிங்கம் – இது வகைக்கு விராகன் எடை 1/2 ( 2 gm )
ஓமம் 2 1/2 ரூபாய் எடை எடுத்து இவைகளை கல்வத்தில் பொடி
செய்து எலுமிச்சம் பழச்சார் விட்டு அரைத்து பதம் வரும் சமயத்தில் தென்னங்
கருப்பட்டி ரூபாய் எடை சேர்த்து அரைத்து மெழுகு பதத்தில் சுண்டாக்காய் அளவு இரண்டு
நேரம் ஏழுநாள் சாப்பிடவும். கடும் பத்தியம் இதனால் தீரும் வியாதிகள் மேக
வியாதிகள், கை கால் முடக்கு வாதம் இரணம், சூலை மேல் தடிப்பு, கன்னப் புத்து, கண்ட
மாலை கைகாலில் விழும் மேகக் கருப்புகள் படர்தாமரை வண்டுகடி தீரும் பால் நெய்
அதிகம் சேர்த்துவரவும் மூன்று மாதம் அவ பத்தியம் கூடாது.
மேற்கண்ட மருந்து
சாப்பிடும் போது கீழ்கண்ட என்னை உபயோகிக்க வேண்டும்.
36)
ஐந்தென்னைத் தயிலம் –
வேப்பெண்ணை , இலுப்பெண்ணை, நல்லெண்ணெய்,
விளக்கெண்ணை, பசுநெய் இவைகள் வகைக்கு படி – 1/2 நன்னாரி,
வெள்ளருகு, அழிஞ்சில் ரூபாய் எடை 1/2 பெருமரத்துப் பட்டை ரூபாய் எடை –1 மிளகு,
வெள்ளைபூண்டு, மஞ்சள். வாசம்பு, கருஞ்சீரகம் இது வகைக்கு ரூபாய் எடை – 1/2 இதை எல்லாம் பசும் பால் விட்டு அரைத்து எண்ணெய்
கலந்து மெழுகு பதத்தில் காய்ச்சி எடுத்துக் கொண்டு வாரம் ஒரு முறை குளித்துவரவும்
அன்று மருந்து நிறுத்தவும்.
37)
திருமூர்த்தி பஸ்பம்
சுக்கு, மிளகு, திப்பிலி,
வெந்தயம், வகைக்கு – 10 கிராம் எடை
தூக்கி எலுமிச்சம் பழச்சார் விட்டு அரைத்துக் குகைபோல் செய்து உலர்த்திக் கொண்டு
சுத்தி செய்த ரசம், கெந்தகம், லிங்கம், எடுத்துக் பொடித்து கொண்டு மேற்கண்ட
குகைக்குள் போட்டு ஒரு பெரிய சட்டியை எடுத்து அதில் முக்கால் பாகம் உப்பைக் கொட்டி
அதில் குகையைப் பதியவைத்து மேல் சட்டி கொண்டு மூடி சீலை செய்து மண் வலுவாக எழு
சீலை செய்து. உலர்த்தி அடுப்பில் வைத்து 18 மணி நேரம் தீ எரித்தால் சட்டியில் மேல் பாகத்தில்
பதங்கம் ஏறி இருக்கும். அந்த பதங்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு பற்பத்தை கிரந்தி
முதல் குஷ்டத்திற்கும் இசைவான பவுந்திரத்திற்கும் சூலைக்கும், பணவெடை 1/4 சர்க்கரையில்
கொடுத்தால் மேற்கண்ட நோய்கள் தீரும்.
38)
கெந்தக ரசாயனம் –
கெந்தகம் ரூபாய் எடை 10
இதைப் பசுவின் பாலில் சுத்தி பன்னி மறுபடி கருஞ்சுக்குட்டி இலைசாரில்
சுத்திபன்னி, பனைமட்டைச் சாதத்தில் சுத்திபன்னி பசுவின் வெண்ணை சமன் போட்டு
கந்தகத்தை உருக்கி இந்தப்படி சுத்தி செய்தது விராகன் – 20 பூரம் விராகன் – 5 ரசம் - 2 1/2சுத்தி செய்த சேங் கோட்டை – 10 மேற்படி மருந்துகளை வெள்ளாட்டு சிறு நீரில்
விட்டு அரைத்து விளக்கெண்ணை –1/4 பசுவின் நெய்
படி – 1/2 விட்டு அறைத்து
அரைத்த மருந்துடன் எண்ணெய், நெய், விட்டு சிறு தீயாய் எரித்து ஒரு பலகை மீது ஒரு
சொட்டு விட்டால் கெந்தக நிறம் இல்லாவிட்டால் இறக்கி வைத்துக் கொண்டு சீனிச்
சர்க்கரையில் 3 – 4 துளிவிட்டு இரண்டு வேலையும் சாப்பிட
யோனிப்புத்து, கன்னப்புத்து, கண்நேசி, மார்பு பிளவை ராசா பிளவை இன்னும் அநேக
பிளவைகள் படைகள் தீரும் இது கைகண்டது. இந்த மருந்து நிதானமாக கொடுக்க வேண்டியது.
39)
மார்க்கண்டேயர் மெழுகு ---
தன்மையாய் நாலாயிரத்து நாற்பத்து எட்டுச் சார்ந்திருக்கும்
வியாதிக் கெல்லாம் சொர்ணமயமாகத் தீருதற்கு மார்க்கஞ்சொல்வேன். அகதீசர் அருளினாலே
அருமையுள்ள புலத்தியனே வெளிவிடாதே, அண்டர்கோன் முனிவர் மெய்தான் அதை குடோரி
என்னசொல்வேன். மகரீசன் தவப்பெண் சுரவை வாசமுள்ள கொப்பு.
மேற்படி வேறு மெழுகு –
விந்து நாத- உமை-வெள்ளை – ஆமையோடு – வேகியோடு – குருதாராமும்
செந்தூர குறியும் சிங்கி தீபமுடன் தீபமும் குடோரி இந்துவும் வெந்திடக் குருவின்
மூலி நீர் பெருக விட்டரைத்து விரை கண்டலை சிந்திடமலதை விட்டரைத்துமே மெழுகு ஆனா பின்னர்
மீதிச் சிமிலில் அதை வைத்துமே ஆறுநேரம் பணவெடை பனை வெல்லத்தில் வைத்து நீதியாக
இரண்டு நேரம் நேர்ந்த சூலை பதினெட்டு குஷ்டம் வெள்ளை குன்மமொடு, காசம், அதி மேக
அரையாப்பு மாற்றும் அன்டவாயுகள் அனைத்துக்கும் அண்டவாதம் முதல் என்பதுவித
வாதங்களுக்கும் அகவை, பீலிகையோடு எட்டுமாம் மார்க்கண்டேயர் மெழுகைக் கண்ட போது
அகலும் காணு வீரிதனை புவியிலே சண்டனும் பயந்து தோடுவான். இதை சாத்துவ குணமுடையவர்
விண்டதாம் நெரிவிட்டிடாதவர் வில்லுவாய் இதனைக் கொள்ளவே இதற்கு அரைப்பு மூலிகை
குப்பைக் கீரைச்சார் விட்டு அரைக்கவும்
இதற்கு விபரம் –
விந்து – ரசம், நாதம் – கெந்தகம், உமை – கெளரி, வெள்ளை – வெள்ளை
பாசானம், ஆமை யோடு – ஆமை யோடு, வேகியோடு குறு – மிருதார் சிங்கி, தாராம் –
அரிதாரம், செந்தூரம் – ராச செந்தூரம், சிங்கி – கலைமான் கொம்பு, தீபம் – சூடன்,
குடோரி – கொடிவேலி, இந்துவும் – இந்துப்பு. ,
40)
வெள்ளைக் குட்டத்திற்கு –
சூரத்து நிலையாவரையை கருக்கி கசாயம் செய்து அதில் காசுக்கட்டி,
சேராங் கொட்டை மூக்கு வெட்டி மூன்று போட்டு வெள்ளிக் காட்டிக் காரம் ரூபாய் எடை போட்டு கடைந்து கல்வத்தில் கை
தொடாமல் அரைத்து கத்தியால் வழித்து கொம்புச் சிமிழில் வைத்து மேற்படி ரோகத்தில்
தடவ மேற்படி ரோகம் தீரும் காசுக்கட்டி ரூபாய் எடை 1 1/4 போடவும்.
41)பூர பதங்கம் –
பூரம் விராகன் எடை – 50
gm
நயம் சாம்பிராணி --------- 60 gm எடுத்து பொடித்து ஒரு கலயத்தில் போட்டு மேலே
சட்டி வாயில் காகிதம் கூம்பு போல் செய்து பொருந்தும் படி ஒட்டி வலுவாக உளுந்து சீலை
செய்து காயவைத்து கால் படி பசு நெய்யில் பெரும் திரி போட்டு தீபம் போல்
கொளுத்தி சட்டியின் அடியில் வைத்து
எரித்து 12 மணி நேரம்
எரிக்கவும். பின் ஆரிய பின் எடுத்து பார்க்க மேலே பதங்கம் இருக்கும் எடுத்து
வைத்துக் கொண்டு 1, 2, 3, அரிசி எடை பனங்
கருப்பட்டியில் வைத்து கொடுக்க 6, 7, வேலை
இச்சாபத்தியம் கை கால் மத மதப்பு தீரும்.
-----------------------------------------------------------------
ஐயா உங்கள் அலைப்பேசி எண் கொடுங்கள் தொடர்புகொண்டு பேசுகின்றேன்.இது என்னுடைய அலைப்பேசி எண் 8015808485, 8667235576
ReplyDeleteஉங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி அய்யா
ReplyDeleteஐயா சிறப்பு.என் எண்.8668034108.
ReplyDeleteஅழைக்கவும் ஐயா.உங்கள் எண் தெரியவில்லை ஐயா
Deleteமார்க்கடேயர்மெழுகுக்கு அளவுகள் கூறப்படவில்லை ஐயா.அளவுகள்தெரிவித்தால் நன்று ஐயா.
ReplyDeleteதங்களுடைய குறிப்புகள் மிகவும் அருமை. தங்களது அலைபேசி எண் அளிக்கவும். தாங்கள் ஏதேனும் நூல் எழுதி இருந்தால் விவரம் தெரியப்படுத்தவும். எனது எண்:9790391679.
ReplyDeleteஅய்யா வணக்கம் கெந்தக செம்பு பற்றி.பதிவிட்டிரிந்தீர்கள்....அதில் சில சந்தேகம் அய்யா.... அதை சுரண்டி எடுத்து வெங்காரம் கொடுத்து உருக்கினால் போதுமானதாக இருக்குமா... அய்யா.....பதிவுகள் அருமை ��
ReplyDeleteஅருமை ஐயா, வாழ்த்துக்கள்
ReplyDeleteSir Book name please
ReplyDeleteபழமையான இந்த மருத்து குறிப்புகள் மிகவும் பாதுகாக்கபடவேண்டும் ஐயா
ReplyDelete